குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1000 கண்டிப்பாக வழங்கப்படும் - அமைச்சர் எ.வ.வேலு

0 3921

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி குடும்பப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் எனத் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

மதுரையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சக்கரபாணி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும் அதிகாரிகள் 5 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர்.

பழனி - கொடைக்கானல் பாதையைத் தேசிய நெடுஞ்சாலையில் இணைத்துத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கேரள அரசுடன் பேசிக் கொடைக்கானல் - மூணாறு சாலையைத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments