ஜாதி, மதம், மத்திய அரசு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கிறிஸ்தவ பங்குத் தந்தை மீது இந்து அமைப்புகள் புகார்

0 2512

ஜாதி, மதம், மத்திய - மாநில அரசுகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படும் கிறிஸ்தவ பங்குத் தந்தை மீது, 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டு உள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பனைவிளை பங்குதந்தை ஜார்ஜ் பொன்னையா என்பவர், சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை பேசியது போன்ற வீடியோ வெளியாகி இருந்தது.

இந்த சூழலில், பங்குத் தந்தை ஜார்ஜ் பொன்னையா மீது சட்ட விரோதமாக கூடுதல் , ஜாதி ,மதம் மற்றும் இரு தரப்பினர் இடையே விரோதத்தை உருவாக்குதல், பொதுஅமைதிக்கு பங்கம் ஏற்படுத்துதல், மத நம்பிக்கைகளை அவதூறு பரப்புதல் என 7 பிரிவுகளின் கீழ் அருமனை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments