முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெறும் சோதனைக்கு அதிமுக கண்டனம்

0 4236

விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கும் அரசின் முடிவுக்கு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் நூலகத்தை அதிமுக எதிர்க்காத நிலையில், ஏற்கனவே தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பது சரியா? என்று கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, அரசியல் காழ்புணர்ச்சியோடு முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் இல்லத்தில் ரெய்டு நடத்தப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் அதிமுகவை அச்சுறுத்தி பார்ப்பதாகவும், எத்தகைய அச்சுறுத்தலையும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்ள தயார் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவடைந்த பிறகு சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள வீட்டிற்கு சென்று எம்ஆர் விஜயபாஸ்கரை முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி, தங்கமணி சந்தித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments