தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

0 2406

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு  பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவையில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்றும் ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

இதனிடையே, வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழக கடலோரம் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், 2 நாட்களுக்கு மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக் கடல், அரபிக் கடல் பகுதிகளுக்கு 5 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments