ரிச்சி தெரு அருகில் உள்ள 5 மாடிக் கட்டடத்தில் திடீர் தீவிபத்து.. பல கி.மீ தொலைவுக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

0 4421

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஐந்துமாடிக் கட்டடத்தில் கணினி உதிரி பாகங்கள் வைத்திருந்த கிடங்கில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

3வது மாடியில் இருந்த தேவராஜ் கம்பியூட்டர்ஸ் என்ற நிறுவனத்தின் உதிரி பாகங்கள் மொத்த விற்பனை கிடங்கில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு தீ மளமளவென கிடங்கு முழுவதும் பரவியது. அதனால் அங்கிருந்து அதிகளவில் கரும்புகை வெளியேறியது.  

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் கட்டிடத்தில் இருந்த ஊழியர்களை ராட்சத கிரேன் மூலம் வெளியேற்றினர். அதைத்தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஈடுபட்டு வருகின்றனர்.  

தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பாரிமுனையில் இருந்து கிண்டி நோக்கிச் செல்லும் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments