சீனாவில் கனமழையால் வெள்ளம் - பல்லாயிரக்கணக்கான மக்கள் தவிப்பு

0 2344

சீனாவில் வரலாறு காணாத கனமழையால் பல்வேறு நகரங்கள் தண்ணீரில் மூழ்கின.

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தின் Zhengzhou நகரில் கொட்டி வரும் கனமழையால் சுரங்கங்கள், குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கின. கனமழையால் 25 பேர் வரை பலியானதாகவும் பல்வேறு இடங்களில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Zhengzhou நகரில் இருந்து ஏறத்தாழ ஒரு லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும், ஏறக்குறைய 1800 பேர் குழுக்களாக பிரிக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும், மேலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் 148 மீட்பு படகுகள் மூலம் 30-க்கும் மேற்பட்ட அதிக பாதிப்புமிக்க பகுதிகளில் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் அதிகம் சூழும் பகுதிகளில் மணல் மூட்டைகளை அடுக்கி மீட்பு குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments