இந்தியாவுக்கு நாடு கடத்தினால் நிரவ் மோடி தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்து : லண்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம்

0 2067
இந்தியாவுக்கு நாடு கடத்தினால் நிரவ் மோடி தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்து : லண்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம்

நீரவ் மோடியை மும்பை சிறைக்கு அனுப்பி வைத்தால் அவர் தற்கொலை செய்துக் கொள்ளக்கூடிய ஆபத்து இருப்பதாக அவருடைய வழக்கறிஞர்கள் லண்டன் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

நீரவ் மோடியை சிறை வைக்க மும்பையில் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவரை இந்தியா அழைத்துவருவதற்கான சட்ட நடவடிக்கைகளில் அமலாக்கத்துறை, சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நீரவ் மோடி சார்பில், புதுப்பிக்கப்பட்ட கோரிக்கை மனுமீது லண்டன் உயர்நீதிமன்ற நீதிபதி மார்ட்டின் சம்பேர்லேன் காணொலி வாயிலாக விசாரணை நடத்தினார்.

இதில் நீரவ் மோடியின் மன நிலையில் ஏற்பட்ட அழுத்தத்தால் அவர் தற்கொலை செய்யும் ஆபத்து இருப்பதாகவும் கொரோனா போன்ற நோய்த்தொற்று காரணமாகவும் அவர் உயிரிழக்கும் ஆபத்து இருப்பதாகவும் வாதாடி நீரவ்மோடியை இந்தியா அனுப்ப வேண்டாம் என்று அவருடைய வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

இதையடுத்து நீதிபதி தமது தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments