நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கார் தொடர்பான மேல்முறையீட்டு மனு -இன்று விசாரணை

0 4260

நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கார் தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்ற அமர்வில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

தனி நீதிபதி விதித்த ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டுமெனவும் கோரியிருந்தார்.

தனி நீதிபதியின் தீர்ப்பு நகல் இல்லாமல், இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு பட்டியலிட கோரியும் விஜய் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுக்களை வரி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் மேல் முறையீட்டு அமர்விற்கு மாற்ற பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், நடிகர் விஜய் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments