புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி மீண்டும் போராட்டம் : டெல்லி ஜந்தர்மந்தரில் காவல்படையினர் குவிப்பு

0 2361
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி மீண்டும் போராட்டம் : டெல்லி ஜந்தர்மந்தரில் காவல்படையினர் குவிப்பு

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் ஜந்தர் மந்தரில் விவசாயிகள் இன்றுமுதல் போராட்டம் நடத்த உள்ளதால் அங்குக் காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

மத்திய அரசு கடந்த ஆண்டு இயற்றிய வேளாண் விளைபொருள் வணிகச் சட்டம், விலை உத்தரவாதத்துக்கான உழவர் உடன்பாடு மற்றும் பண்ணைச் சேவைகள் சட்டம், இன்றியமையாப் பொருட்கள் சட்டம் ஆகியவற்றைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் நவம்பர் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் முடியும் வரை ஜந்தர் மந்தரில் உழவர் நாடாளுமன்றம் என்னும் பெயரில் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

இரு விவசாய சங்கங்கள் சார்பில் மொத்தம் 206 பேர் மட்டுமே பங்கேற்கவும், காலை முதல் மாலை 5 மணி வரை போராட்டம் நடத்தவும் டெல்லிக் காவல்துறை அனுமதித்துள்ளது. இதையொட்டி ஜந்தர் மந்தரிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments