பாஜகவின் தொண்டனாக இருப்பதில் பெருமிதம்: எடியூரப்பா

0 2577
பாஜகவின் தொண்டனாக இருப்பதில் பெருமிதம்: எடியூரப்பா

கர்நாடக முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், தொண்டர்கள் யாரும் எவ்விதமான போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எடியூரப்பாவுக்கு 75 வயது ஆகிவிட்டதால், பதவியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு பாஜக மேலிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. வருகிற 26-ந் தேதி நடைபெறும் பாஜக எம்.எல்.ஏ கூட்டத்தில் அவர் ராஜினாமா செய்யவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், எடியூரப்பா தனது டுவிட்டர் பதிவில், பாஜகவின் உண்மையான தொண்டனாக இருப்பதில் தாம் பெருமிதம் கொள்வதாகவும் தொண்டர்கள் யாரும் எவ்விதமான போராட்டத்திலோ இல்லை மரியாதைக் குறைவான செயல்களிலோ ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments