சபரிமலை கோவில் 5 நாட்கள் சிறப்பு பூஜைக்கு பிறகு நடை சாத்தப்பட்டது

0 1251

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 5 நாட்கள் சிறப்பு பூஜைக்கு பிறகு நடை சாத்தப்பட்டது.

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 16-ந் தேதி திறக்கப்பட்டது. நிறைவு நாளான நேற்று நடைபெற்ற கலச பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யப்பனை வழிபட்டனர்.

5 நாட்களாக நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோவில் நடை நேற்று இரவு அடைக்கப்பட்டது. ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் 15-ந் தேதி மீண்டும் திறக்கப்படும் என்றும், 23-ந் தேதி ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகள் நடைபெறும் எனவும் திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments