ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெளுத்து வாங்கிய மழை.. ஸ்தம்பித்த சீனா..!

0 4066
மத்திய சீனாவில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருவதால் ஹெனான் (Henan) மாகாண தலைநகர் Zhengzhou ஸ்தம்பித்துள்ளது.

மத்திய சீனாவில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருவதால் ஹெனான் (Henan) மாகாண தலைநகர் Zhengzhou ஸ்தம்பித்துள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிகப்பட்ட இடங்களில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
கன மழையின் கோர தாண்டவத்தில் சிக்கி இதுவரை 25 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூன்று நாட்களில் 617.1 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது.

இது ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக மழைப்பொழிவு என்று சீன வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நகரின் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

சாலைகளும், சுரங்கவழி பாதைகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் ஒரு கோடியே 20 லட்சம் பேர் வாழும் Zhengzhou நகரம் மற்ற பகுதிகளில் இருந்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள சீன ராணுவத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments