மிக மிக கனமழை பெய்யும்.. மும்பைக்கு ரெட் அலர்ட்..!

0 2813

மும்பையில் மிக மிக கனமழை பெய்யும் என்பதால், இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று மற்றும் நாளை மும்பையில் மிக கனமழை பெய்யும் என்று குறிப்பிட்டு ஏற்கனவே ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டு, மிக மிக கனமழை பெய்யும் என குறிப்பிட்டு, மும்பை, தானே, நவி மும்பை உள்பட 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் 20 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், 24 ஆம் தேதிக்கு பிறகே மழை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால் மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுகிழமை முதல் கனமழை பெய்து வருகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments