அதிகரிக்கும் கொரோனா.. கேரளாவில் ஜூலை 24,25 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு..!

0 6454
கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, வருகிற 24 மற்றும் 25 ஆம் தேதி சனி, ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, வருகிற 24 மற்றும் 25 ஆம் தேதி சனி, ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பக்ரீத் பண்டிகைக்காக கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதற்கு, உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளே தற்போதும் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, வரும் வெள்ளிக்கிழமை 3 லட்சம் கொரோனா பரிசோதனை நடத்த கேரள மாநில சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 17 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இது இந்திய அளவில் பதிவான கொரோனா தொற்றின் விகிதத்தில் 42 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments