முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 6 மாதக் குழந்தை உயிரிழப்பு

0 2075
முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 6 மாதக் குழந்தை உயிரிழப்பு

முதுகெலும்பு தசைநார் சிதைவு என்னும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருந்த 6 மாதக் குழந்தை இம்ரான் கோழிக்கோடு மருத்துவமனையில் நேற்றிரவு உயிரிழந்தது.

ஆரிப், ரமீசா தாஸ்னி ஆகியோரின் குழந்தையான இம்ரானுக்கு அரியவகை நோய் இருப்பது பிறந்த 17 நாட்களில் கண்டறியப்பட்டது. குழந்தையின் சிகிச்சைக்கும் மருந்து வாங்கவும் 18 கோடி ரூபாய் தேவைப்பட்டதால் அதைத் திரட்டுவதற்குக் குழு அமைத்து உலகெங்கும் உள்ள மலையாள மக்களிடம் உதவி கோரப்பட்டது.

குழந்தைக்குத் தேவையான மருந்தை இறக்குமதி செய்ய வரி விலக்கு அளிக்கும்படி முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கோரிக்கை விடுத்தார். 16 கோடியே 50 இலட்ச ரூபாய் திரட்டப்பட்ட நிலையில் கோழிக்கோடு மருத்துவமனையில் குழந்தை இம்ரான் நேற்றிரவு உயிரிழந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments