ஆம்புலன்ஸ் சைரனுக்கு செவி சாய்க்காத கார் ஓட்டுநர்.. கம்பிக்கு பின்னால் அடைத்த போலீஸ்..!

0 3981
கர்நாடக மாநிலத்தில் ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் காரை ஓட்டிய நபரின் வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

கர்நாடக மாநிலத்தில் ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் காரை ஓட்டிய நபரின் வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

திங்கள் மாலை, கனச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் ஆம்புலன்ஸ் மூலம் மங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தக்ஷின கனடா மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் வெகு நேரமாக ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் ஓட்டுநர் ஒருவர் சாலையின் குறுக்கே காரை ஓட்டிச் சென்றார். ஆம்புலன்ஸில் இருந்த நபரால் பதிவு செய்யப்பட்ட கானொளி இணையத்தில் வைரல் ஆனது. ஆம்புலன்ஸின் சைரன் ஒலிக்கும், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தொடந்து எழுப்பிய ஹாரன் ஒலிக்கும் செவி சாய்க்காத கார் ஓட்டுநருக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்தன.

வாகன எண்ணை வைத்து சரன் என்ற அனிமேஷன் நிபுணரை கைது செய்த போலீசார் அவர் மது அருந்தி விட்டு கார் ஓட்டினாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments