தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

0 2989

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், வங்கக் கடலில் நாளை மறு நாள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக தெரிவித்துள்ளது. 

இது குறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், அடுத்த 2 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்றும் வட கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். 23, 24, 25 ஆகிய 3 நாட்களுக்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் குமரியில் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

இதனிடையே, வடமேற்கு வங்கக் கடலில் வருகிற 23-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் 3 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் அரபிக் கடல் பகுதிகளுக்கும் 5 நாட்களுக்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments