தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பியவன் கைது

0 2177
தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பியவன் கைது

தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமிக்கு, வாட்ஸ் ஆப்-ல் ஆபாச வீடியோ அனுப்பியவன் கைது செய்யப்பட்டான். ஆபாச வீடியோ அனுப்பியவனை போலீசார் கைது செய்யவில்லை என்றால், தாங்களே கண்டுபிடித்து, அரபு நாடுகள் பாணியில் நடவடிக்கை எடுக்கப்போவதாக கையில் அரிவாளுடன் ஆவேசமாக பேசி வீரலட்சுமி வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில், வீடியோ அனுப்பிய அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்த 38 வயதான ஆரோக்கியசாமியை, சங்கர் நகர் போலீசார் கேரளா சென்று கைது செய்தனர். கேரள மாநிலம் மலப்புரத்தில் டிரில்லிங் மெஷின் ஆபரேட்டர் ஆக பணிபுரிந்து வந்த ஆரோக்கியசாமி, நள்ளிரவு சென்னை அழைத்து வரப்பட்டான்.

விசாரணையில், மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் ஆரோக்கியசாமி, முகநூல் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் ஆபாசமாக வீடியோக்களை அனுப்பியது தெரியவந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments