கொரோனாவுக்கு பயந்து.. 15 மாதங்களாக வீட்டை விட்டு வெளியே வராத பெண்கள்..! மெலிந்த நிலையில் மீட்டு மருத்துவமனையில் அனுமதி

0 18483

ஆந்திராவில் கொரோனாவுக்கு பயந்து 15 மாதங்களாக வீட்டை விட்டு வெளியே வராத 3 பெண்கள் உடல் மெலிந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம கதலி என்ற கிராமத்தை சேர்ந்த ஜான் பென்னி என்ற 50 வயதான நபருக்கு ரூத்தம்மா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். ஜான் பென்னியும் அவரின் மகனும் அந்த கிராமத்தில் சைக்கிள் ரிப்பேர் பார்க்கும் கடை நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஜான் பெண்ணியின் வீட்டின் அருகில் வசித்த பெண் ஒருவர் இறந்து போனார். இதனால், பயந்து போன ஜான் பென்னியின் குடும்பத்தில் பெண்கள் மட்டும் வீட்டில் இருந்து வெளியே வருவதையே நிறுத்தி விட்டனர்.

உணவு, காய்கறி, மளிகைப் பொருட்கள் மற்றும் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கவும் வேலைக்காகவும் ஜான் பென்னியும் அவரின் மகன் சின்னாபாபுவும் வெளியே வந்துள்ளனர். பக்கத்தில் வசிப்பவர்களுடன் பேசினால் கூட கொரோனா தொற்று பரவிவிடும் என்று கருதி ஜான் பென்னியின் மனைவி, மகள்கள் அக்கம்பக்கத்தினர் யாருடனும் பேசுவதையும் தவிர்த்து விட்டனர்.

இதற்கிடையே ஜான் பென்னிக்கு முதல்-மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாயத்து ஊழியர் ஒருவர், ஜான் பென்னியின் வீட்டுக்கு அது குறித்த தகவல் தெரிவிக்க சென்றுள்ளார். அப்போதுதான், ஜான் பென்னி வீட்டிலுள்ள பெண்களின் நிலை குறித்து தெரிய வந்துள்ளது. உடனடியாக, பஞ்சாயத்து தலைவர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பெண்களை மீட்டனர். சுமார் ஒன்றரை ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கிய 5 பேரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டனர். அதன்பின் அவர்களை வலுக்கட்டாயமாக வீட்டை விட்டு வெளியேற்றி Rajolu நகர அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த 3 பெண்களுக்கும் சூரிய ஒளி உடலில் படாத காரணத்தினால் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் , ஹீமோகுளோபினும் குறைந்து போயிருப்பதாகவும் மனநிலை குழம்பிய நிலையில் அவர்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments