பாகிஸ்தான், வங்கதேச வீரர்களுக்கு எல்லைப் பகுதிகளில் இந்தியப் படையினர் பக்ரீத் வாழ்த்து

0 2413

பக்ரீத் பெருநாளையொட்டி இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தான், வங்கதேச எல்லைப் பகுதிகளில் உள்ள அந்த நாடுகளின் படையினருக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.

ராஜஸ்தானின் பார்மரில் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரும், பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் வீரர்களும் ஒருவருக்கொருவர் இனிப்புகளையும் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.

இதேபோல் அசாம், மேற்கு வங்க மாநிலங்களையொட்டி எல்லைக் காவல் பணியில் ஈடுபட்டுள்ள வங்கதேச வீரர்களுக்கும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments