தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்

0 2202
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழகம் வந்துள்ள மத்திய பிரதேச மாநில மருத்துக்கல்வி துறை அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன், இந்தியாவிலேயே முதன்முறையாக தனியார் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர் நிதி மூலம் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் கோவையில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றார்.

மருத்துவத் துறையில் 30ஆயிரம் பேர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருவதாகவும், ஊரடங்கு காலத்திற்கு பின் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும், ஒப்பந்த பணியாளர்கள் யாரும் பணி நீக்கம் செய்யப்படவில்லை எனவும் அமைச்சர் விளக்கமளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments