ஆபாச படங்கள் தயாரித்த விவகாரத்தில் நடிகை ஷில்பாவுக்கு தொடர்பு இருப்பதாக இதுவரை கண்டறியவில்லை - மும்பை போலீஸ்

0 2048
ஆபாச படங்கள் தயாரித்த விவகாரத்தில் நடிகை ஷில்பாவுக்கு தொடர்பு இருப்பதாக இதுவரை கண்டறியவில்லை - மும்பை போலீஸ்

பாச படங்கள் தயாரித்த விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பிருப்பதாக இதுவரை கண்டறியவில்லை என மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆபாசப் படங்களை தயாரித்து செல்போன் செயலிகளுக்கு விற்பனை செய்ததாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், வழக்குத் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மும்பை போலீசார், ஆபாச படங்கள் விவகாரத்தில் ராஜ்குந்தராவின் மனைவியும், நடிகையுமான ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு இருப்பதாக இதுவரை கண்டறியவில்லை எனக் கூறியுள்ளனர்.

இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், ராஜ்குந்த்ராவால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே முன் வந்து புகார் கூறலாம், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments