23, 24-ந் தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

0 2007

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும். 23,24ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். வங்கக் கடலில் நாளை மறு நாள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால், தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் எனவும், மீனவர்கள் 3 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments