சைபர் கிரைம் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு குறும்படங்களை வெளியீடு

0 2746
சைபர் கிரைம் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு குறும்படங்களை வெளியீடு

சைபர் கிரைம் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு குறும்படங்களை வெளியிட்டுள்ள போலீசார், அது குறித்து புகார் தெரிவிப்பதற்கான செல்போன் எண் மற்றும் இணையதள முகவரியை அறிவித்துள்ளனர்.

காவல்துறை அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் உள்பட குறிப்பிட்ட நபரின் பெயரில் போலி முகநூல் கணக்கைத் தொடங்கி அவரது நண்பர்களிடம் பணம் பறிக்கும் முறைகேடு சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

அதே போல வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஓடிபி, சிவிவி எண்களை கேட்டு மோசடி செய்வது குறித்தும், வேலை வாய்ப்புக்காக ஆன்லைன் மூலமாக பணம் பறிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ள போலீசார், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து https://www.cybercrime.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவோ, 155260 என்ற தொலைபேசியிலோ புகார் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments