நிதி நிறுவன மோசடி- ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு

0 2009

நிதி நிறுவன மோசடி தொடர்பாக கும்பகோணத்தில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் மீது தஞ்சை மாவட்ட குற்றத்தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சாமிநாதன் ஆகியோர் ஹெலிகாப்டரை பயன்படுத்தி வந்ததால் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் நடத்தி வந்த விக்டரி ஃபைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் இரு மடங்காக திருப்பி தரப்படும் என கூறி பலரிடம் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் கூறியப்படி பணத்தை திருப்பி தராமல் 15 கோடி ரூபாய் மோசடி செய்ததாக துபாயைச் சேர்ந்த பைரோஸ் பானு, ஜபருல்லா ஆகியோர் தஞ்சை மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது வழக்கு பதிந்த போலீசார், அவர்களது வீட்டை ஆய்வு செய்தபோது இருவரும் தலைமறைவானது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments