நள்ளிரவில் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக டீ, பிஸ்கட் வழங்கும் உதவி ஆணையர்: தூக்கத்தில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க முயற்சி

0 2552

தூக்க கலக்கத்தில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் விதமாக மதுரையில் காவல் உதவி ஆணையர் ஒருவர், நள்ளிரவில் வரும் வாகன ஓட்டிகளை நிறுத்தி தனது சொந்த செலவில் டீ, பிஸ்கட் வழங்கினார்.

தல்லாகுளத்தை சேர்ந்த் உதவி ஆணையர் சேகர் , நேற்றிரவு கோரிப்பாளையம் பகுதியில் பணியில் இருந்தபோது, அவ்வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகளை நிறுத்தி, வாகன ஓட்டிகளை முகம் கழுவ செய்து பிஸ்கட், டீ மற்றும் முக கவசம் கொடுத்து அனுப்புவதுடன், தூக்கம் வந்தால் சிறிது நேரம் ஓய்வெடுத்தபின் செல்லுங்கள் என அறிவுரையும் வழங்கி வருகிறார்.

இரவு பணிக்கு செல்லும் போதெல்லாம் உதவி ஆணையர் சேகர் இந்தப்பணியை தொடர்ந்து செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments