ஈரோடு அருகே ரூ.28ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாகக் கைது

0 9877

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் வடுகபட்டியில் பட்டா மாறுதலுக்கு 28ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

அரச்சலூர் வடுகபட்டியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் தனது கணவர் குமாரின் பெயரில் உள்ள வீட்டின் பட்டாவை தனது பெயருக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொண்டார். இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்வெற்றிவேலிடம் கூறிய போது அவர் 28ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இதுதொடர்பாக புவனேஸ்வரி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.

அவர்களின் ஆலோசனைப்படி  ரசாயனம் தடவிய பணத்தை வெற்றிவேலிடம் அளித்த போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது  செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments