இமாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட சரக்கு லாரி - பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

0 1679
இமாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட சரக்கு லாரி - பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் சோலன் மினாஸ் மாநில நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பாலத்தில் சரக்கு வாகனம் ஒன்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது.

வெள்ளத்தை மீறி வாகனத்தை ஓட்ட முடியாமல் அந்த ஓட்டுனர் நீரில் குதித்து உயிர் தப்பினார். லாரி அந்தப் பாலத்தில் வழிமறித்து நின்றதால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இதே போன்று உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தில் கனமழை பெய்த நிலையில் ஒரு லாரியும் காரும் ஆற்றில் விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.அதில் இருந்தவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments