சினிமாவில் வருவது போல பல அடி தூரம் பறந்து வந்த கார்... சுக்கல் சுக்கலாக நொறுங்கி விபத்து

0 3417

சினிமாக் காட்சியைப் போன்று, பல அடி தூரம் பறந்து வந்த கார் ஒன்று விபத்துக்குள்ளாகி சுக்கல் சுக்கலாக நொறுங்கிய வீடியோ வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் யூபா சிட்டி பகுதியில் காரில் குடும்பத்தினர் சென்று கொண்டிருந்தனர். 99 வது நெடுஞ்சாலையில் அவர்கள் சென்றபோது, இடதுபுறத்தில் திடீரென மற்றொரு கார் ஒன்று புழுதியைக் கிளப்பியபடி, அசுரவேகத்தில் காற்றில் பறந்து வந்து சாலையில் தலைகுப்புற விழுந்தது.

இதனைக் கண்ட குடும்பத்தினர் பயத்தில் அலறவே, விபத்துக்குள்ளான கார் சாலையில் பலமுறை உருண்டு விழுந்து நொறுங்கியது. விபத்தில் சிக்கிய காரின் ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments