தொழில்தொடங்க உகந்த மாநிலம்… ஒரு லட்சம் கோடி டாலர் ஜிடிபி தமிழ்நாட்டு அரசின் இலக்கு..!

0 1680
தொழில்தொடங்க உகந்த மாநிலம்… ஒரு லட்சம் கோடி டாலர் ஜிடிபி தமிழ்நாட்டு அரசின் இலக்கு..!

தெற்காசியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை ஆக்குவதும், 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை எட்டுவதுமே தமது அரசின் இலக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. 17 ஆயிரத்து 141 கோடி ரூபாய் முதலீட்டில் 55 ஆயிரத்து 54 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் JSW Renew Energy, ZF Wabco, Capita Land, Srivaru Motors, TCS மூன்றாம் கட்டம் உள்ளிட்ட 35 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை எட்டுவதே தமது அரசின் இலக்கு எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

AG&P Pratham, TCS இரண்டாம் கட்டம் உள்ளிட்ட 9 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டியதுடன், 5 திட்டங்களின் வணிக உற்பத்தியையும் தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் ஒற்றைச் சாளர இணையத்தளத்தை தொடங்கி வைத்து, 5 புத்தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவதற்கான உத்தரவுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments