இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி வெற்றி

0 5185

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனை அடுத்து முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்தது. அசலங்கா 65 ரன்களும், அவிஷ்கா பெர்னாண்டோ 50 ரன்களும் சேர்த்தனர்.

276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய இந்திய வீரர்கள், எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். சூர்யகுமார் யாதவ் 53 ரன்களும், தீபக் சஹார் ஆட்டமிழக்காமல் 69 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

49.1 ஒவரில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அடுத்தடுத்து 2ல் வெற்றி பெற்று இந்திய அணி தொடரையும் கைப்பற்றியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments