நடிக்க வாய்ப்பு தேடி வந்த இளம்பெண் : நண்பர்களோடு சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த உதவி இயக்குனர்

0 6201

சென்னையில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி தன்னை பல முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக இளம்பெண் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலிகிராமத்தில் தங்கி நடிக்க வாய்ப்பு தேடி வந்த அந்த இளம்பெண்ணிடம், உதவி இயக்குனர் எனக் கூறிக் கொண்டு அறிமுகமான, அடையாறைச் சேர்ந்த கணேஷ் என்பவன், நண்பர்களோடு சேர்ந்து வற்புறுத்தி பல முறை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த பெண் அடையாறு மகளிர் போலீசில் புகாரளித்திருந்தார். போலீசார் அழைத்ததின் பேரில் விசாரணைக்கு புறப்பட்ட அந்த இளம்பெண், கடிதம் எழுதி வைத்துவிட்டு அதிகளவில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு பாதி வழியிலேயே மயங்கி விழுந்த நிலையில், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments