உறைகிணறு தோண்டிய போது மண்ணில் சிக்கிய தொழிலாளி : 5 மணி நேரப் போராட்டத்திற்கு பின் மீட்ட தீயணைப்புத் துறையினர்

0 1967

திருநெல்வேலி மாவட்டம் உவரியில் உறைகிணற்றுக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிக் கொண்ட தொழிலாளியை நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீட்டுக்குக் கழிவுநீர்த் தொட்டி அமைப்பதற்கு உறைகிணறு தோண்டும் பணியில் தொழிலாளி ஒருவர் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக மணல் சரிந்து விழுந்து தொழிலாளியின் இடுப்புவரை மூடியது. சக தொழிலாளர்கள் அவரை மீட்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 5 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு மணலில் சிக்கிய தொழிலாளியைப் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உறைகிணறு தோண்டப்பட்ட பகுதி கடலோரத்தில் மணற்குன்றுகள் நிறைந்த தேரிப் பகுதி என்பதால் மணல் சரிந்ததாகக் அப்பகுதி பொதுமக்கள் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments