ஒரு மணி நேரமா வேகுது, வேகுது... வெந்துகிட்டே இருக்குது... நாள்பட்ட முட்டையை விற்று விட்டு மூட்டை கட்டிய வியாபாரி

0 50250

ந்திர மாநிலத்தில் நாள்பட்ட முட்டைகளை வாங்கிய மக்கள் அதை அவிக்க முடியாமல் திணறியுள்ளனர். ஒரு மணி நேரம் அவித்தும் அவியாததால், மக்கள் நொந்து போனார்கள்.

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், வரிகுண்டபாடு மண்டலத்தில் சுற்று வட்டார கிராம பகுதிகளில் நேற்று முட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினி வேன் வந்துள்ளது. வேனில் இருந்த வியாபாரி, ஊர் முழுக்க சுற்றி, 30 முட்டைகள் ரூபாய் 130- க்கு விற்பனை செய்துள்ளார்.

விலை குறைவு என்பதால், பலரும் முட்டைகளை டிரே கணக்கில் வாங்கினர். கிட்டத்தட்ட 10,000 முட்டைகள் விற்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஒரு மணி மணி நேரத்தில் அனைத்து முட்டைகளையும் விற்றுவிட்டு அந்த முட்டை வியாபாரி மூட்டை கட்டிக் கொண்டு கிளம்பி விட்டார்.

இந்நிலையில், முட்டையை வாங்கியவர்கள் முட்டையை சமைக்க முயன்றனர். சுமார் ஒரு மணி நேரம் ஆகியும் முட்டை வேகாததால், சந்தேகம் அடைந்தனர். பின்னர் அந்த முட்டையை எடுத்து உடைத்து பார்த்தால், அதில் ஒன்றுமே இல்லை.

ஒருவழியாக நாள்பட்ட முட்டையை விற்று வியாபாரி தங்களை ஏமாற்றப்பட்டதை மக்கள் உணர்ந்தனர். தொடர்ந்து, வரிகுண்டபாடு போலீஸ் நிலையத்தில் அந்த முட்டை வியாபாரி மீது கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, போலீஸார் வழக்கு பதிவு செய்து, முட்டை வியாபாரியை தேடி வருகின்றனர்.

இது குறித்து முட்டை உற்பத்தியாளர்கள் கூறுகையில், இந்தியாவில் பெரும்பாலும் போலி முட்டைகள் தயாரிக்கப்படுவதில்லை எனவும், ஒரு போலி முட்டை தயாரிக்க 8 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை செலவாகும் எனவும் தெரிவிக்கின்றனர். நாள்பட்ட முட்டைகளை வேக வைக்கும் போது அதில் பிளாஸ்டிக் போன்று உருவாகக் கூடும் எனபதால் தான், கீழே போடும் போது முட்டை உடையாமல் இருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments