அடடா மழை டா... அட மழை டா... குடைக்குள் மழை என மதுபிரியர் உற்சாக நடனம்

0 2421

தெலுங்கானாவில் குடிபோதையில் முதியவர் ஒருவர் மழைக்கு இடையே குடையைப் பிடித்துக் கொண்டு நடனமாடிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

ஆதிலாபாத் மாவட்டம் உட்னுர் பகுதியைச் சேர்ந்த அந்த முதியவர், மது அருந்திவிட்டு வந்த போது, அங்குள்ள கடையில் பழைய சினிமா பாடல் ஒன்று ஒலிபரப்பாகியுள்ளது. இதனைக் கேட்டு உற்சாகமடைந்த அந்த முதியவர், சாலையிலேயே மழையையும் பொருட்படுத்தாமல் குடையைப் பிடித்தபடி நடனமாடினார்.

இதனை, அங்கிருந்த சில இளைஞர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments