அதிமுகவை தனது குடும்பம் என சசிகலா கூறுவது நகைப்பிற்குரியது - ஜெயக்குமார்

0 3141

அதிமுகவின் கட்சிக் கொடியை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரை சசிகலா பயன்படுத்த கூடாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி இருக்கிறார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதுசூதனனை பார்க்க சசிகலா வந்ததை கொச்சைப்படுத்த முடியாது, உடல் நலமற்றவரை பார்க்க வருவது ஆரோக்கியமான விசயம், என்றார்.

ஆனால் அரசியலை விட்டு ஒதுங்குவதாக கூறிய பிறகு நெறிமாறாமல் இருப்பதே சசிகலாவிற்கு சிறந்தது என்று கூறிய ஜெயக்குமார், அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகவே இல்லாத சசிகலா, அதிமுகவை தனது குடும்பம் என கூறுவது நகைப்பிற்குரியது என்று விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments