இந்தியா இரண்டு MH-60R சீஹாக் ஹெலிகாப்டர்களை பெற்றதற்கு பென்டகன் பாராட்டு

0 1786
இந்திய-அமெரிக்க கடற்படைகள் இடையே வலுவான கூட்டுறவு

இந்தியா அமெரிக்காவின் ஸீஹாக் ஹெலிகாப்டர்கள் மற்றும் P-8 பொசைடன் (Poseidon) கடல் கண்காணிப்பு விமானங்களை வாங்கி உள்ளதால், இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையே உறவுகள் வலுவடைந்து செயல்திறன் அதிகரிக்கும் என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், சான்டியாகோ நார்த் ஐலண்ட் கடற்படை விமான தளத்தில் இருந்து இரண்டு MH-60R சீஹாக் ஹெலிகாப்டர்களை இந்தியா பெற்றுக் கொண்டது. அதற்கும், கோவாவில் வைத்து 10 ஆவது P-8 பொசைடன் விமானத்தை பெற்றுக் கொண்டதற்கும், இந்தியாவுக்கு பாராட்டு தெரிவிப்பதாக பென்டகன் பத்திரிகை செயலர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் Lockheed Martin நிறுவனத்திடம் இருந்து சுமார் 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் 24 MH-60R பல்நோக்கு சீஹாக் ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய கடற்படை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments