நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூவின் ட்விட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்துவிட்டதாக புகார்

0 2521
நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூவின் ட்விட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்துவிட்டதாக புகார்

நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூவின் டிவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை குஷ்பூவின் ட்விட்டர் கணக்கை 1.3மில்லியன் பேர் பின் தொடருகின்றனர். இந்த நிலையில், குஷ்பூவின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள், அதில் பெயர் மற்றும் Profile படங்களை மாற்றியதோடு, இதற்கு முன் பதிவிட்டிருந்த பதிவுகளையும் அழித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து கூறியுள்ள நடிகை குஷ்பூ 3 நாட்களாக தனது ட்விட்டர் கணக்கை பயன்படுத்த இயலவில்லை எனவும், சைபர் கிரைம் போலீசில் புகாரளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments