இந்தியாவில் அதிக மின்னல் வெட்டு தாக்குதல் நடந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம்

0 5348
இந்தியாவில் அதிக மின்னல் வெட்டு தாக்குதல் நடந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம்

ந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் 1 கோடியே 30 லட்சம் முறை அதிபயங்கர மின்னல் வெட்டு ஏற்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டில் மின்னல் வெட்டு எண்ணிக்கை 23 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

மின்னல் வெட்டு அதிகம் ஏற்படும் மாநிலங்களில் முதலிடத்தில் தமிழகமும், ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் அடுத்தடுத்து வரிசைகளில் உள்ளன என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவிலேயே அதிகபட்சமாக கடந்த ஆண்டில் தமிழகத்தில் மட்டும் ஆயிரத்து 323 முறை அதிபயங்கர மின்னல் வெட்டு தாக்கம் ஏற்பட்டு உள்ளதாகவும், பீகார், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மின்னல் வெட்டு மூலம் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments