ஈராக் குண்டுவெடிப்பில் 28பேர் உயிரிழப்பு ; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

0 1750
ஈராக் குண்டுவெடிப்பில் 28பேர் உயிரிழப்பு ; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே நடைபெற்ற பயங்கர குண்டுவெடிப்பில் பெண்கள், குழந்தைகள் உள்பட 28பேர் கொல்லப்பட்டனர். Sadr நகரம் அருகே உள்ள மார்க்கெட் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது.

இந்த சம்பவத்தில் அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 28பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சம்பவம் குறித்து ஈராக் பாதுகாப்பு அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments