மும்பையில் வெள்ளத்தில் சிக்கி தவித்த தந்தையையும், மகளையும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லும் காவலர்

0 1773
மும்பையில் வெள்ளத்தில் சிக்கி தவித்த தந்தை-மகள்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வெள்ளத்தில் சிக்கி தவித்த தந்தை மற்றும் மகளை போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.

Kandivali பகுதியில் இடைவிடாத பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது அங்கிருந்த ஒரு வீட்டை வெள்ளம் சூழ்ந்து கொண்டதால் காயம் அடைந்த தந்தை மற்றும் மகள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

இதனை அறிந்த போலீஸ்காரர் ஒருவர் விரைந்து வந்து முழங்கால் அளவு வெள்ளத்தில் மகளை தோளில் தூக்கி கொண்டும்,தந்தையை பாதுகாப்பாகவும் பத்திரமான இடத்திற்கு அழைத்து சென்றார். அவரின் இந்த தன்னலமில்லா மனித நேய செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments