டோக்கியோ சென்றுள்ள இந்திய குழுவை ஊக்குவிக்க ஒலிம்பிக் சின்னத்தின் வர்ணத்தில் மிளிர்ந்த ஹவுரா பாலம்

0 1863
டோக்கியோ சென்றுள்ள இந்திய குழுவை ஊக்குவிக்க ஒலிம்பிக் சின்னத்தின் வர்ணத்தில் மிளிர்ந்த ஹவுரா பாலம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக கொல்கத்தாவின் அடையாளமான ஹவுரா பாலம் ஒலிம்பிக் சின்ன வர்ணத்தில் மிளிர்ந்தது.

வரும் வெள்ளிக்கிழமை டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா தொடங்க உள்ள நிலையில் தொடரில் பதக்கம் வெல்ல இந்திய வீரர், வீராங்கனைகள் கடும் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய குழுவை ஊக்குவிக்கும் விதமாக கொல்கத்தா ஹவுரா பாலத்தில் ஒலிம்பிக் சின்னத்தின் வர்ணங்கள் மிளிரவிடப்பட்டது.

வண்ண விளக்குகளுக்கு மத்தியில் வாண வேடிக்கையுடன் பாலத்தை பொது மக்கள் கண்டு ரசித்தனர். இதுகுறித்த வீடியோவை மத்திய துறைமுகங்கள் மற்று கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments