ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள டோக்கியோ சென்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகள் கடும் பயிற்சி

0 1881
ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள டோக்கியோ சென்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகள் கடும் பயிற்சி

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள டோக்கியோ சென்று உள்ள இந்திய வீரர், வீராங்கனைகள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் முதல் இந்திய வாள்வீச்சு போட்டியாளரான தமிழக வீராங்கனை பவானி தேவி டோக்கியோவை சென்றடைந்து பயிற்சியை தொடங்கியுள்ளார்.

மற்றொரு புறம் இந்திய வில்வித்தை குழு கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

பெண்கள் குத்துச்சண்டை அணியை சேர்ந்த மேரிகோம் உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய குதிரையேற்ற வீரர் Fouaad Mirza ஒலிம்பிக் கிராம ஓடுதளத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 

அதேபோல் இந்திய மகளிர் ஆக்கி அணியினர் களம் புகுந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை பிரனதி நாயக், மற்றும் இந்திய நீச்சல் வீரர் ஸ்ரீ ஹரி மற்றும் வீராங்கனை மானா பாட்டேல் ஆகியோரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய பேட்மிண்டன் குழுவை சேர்ந்த பி.வி.சிந்து, சாய் பிரணீத், சத்விசாய்ராஜ் ராங்கி ரெட்டி, சிராஜ் செட்டி ஆகியோரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள் சரத்கமல், மற்றும் சத்யன் குணசேகரன் பயிற்சியில் ஈடுபட்டனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments