மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

0 1900
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று மாலை 6 மணி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகரில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12 ஆயிரத்து 804 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேலும் அணையின் நீர்மட்டமும் 72.61 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர துவங்கியுள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகளும், மேட்டூர் அணை மீனவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments