செங்கல்பட்டு அருகே வயதான தம்பதி கொல்லப்பட்டு கழிவுநீர் தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் : சந்தேகத்தின் பேரில் 3 பேரிடம் போலீசார் விசாரணை

0 1840
செங்கல்பட்டு அருகே வயதான தம்பதி கொல்லப்பட்டு கழிவுநீர் தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் : சந்தேகத்தின் பேரில் 3 பேரிடம் போலீசார் விசாரணை

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் மனைவியுடன் கொல்லப்பட்டு கழிவுநீர் தொட்டியில் வீசப்பட்ட சம்பவத்தில், 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கொளப்பாக்கத்தைச் சேர்ந்த சாம்சன் தினகரனும் அவரது மனைவி ஜெனட்டும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டு கழிவுநீர் தொட்டியில் சடலங்கள் வீசப்பட்டிருந்தன.

சாம்சன் தினகரன் வளர்த்து வந்த நாய் ஒன்று மிகவும் ஆக்ரோஷமானது என்றும் புதியவர்கள் வீட்டுப் பக்கம் வந்தால் குரைக்கும் என்றும் கூறப்படும் நிலையில், சம்பவத்தன்று அந்த நாய் மாயமாகி, மறுநாள் காலை வந்திருக்கிறது. 

கொலையாளிகள் ஏற்கனவே நாய்க்குப் பழக்கப்பட்டவர்களாக இருந்து அதன் கவனத்தை திசை திருப்பி வேறு எங்காவது அழைத்துச் சென்றிருக்கலாம் என்றும் அல்லது கொலையாளிகளைத் துரத்திச் சென்று நாய் வழிமாறி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments