குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

0 2672
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை நூறாண்டு விழாவுக்குத் தலைமைதாங்கி, கலைஞரின் திருவுருவப்படத்தைத் திறந்துவைக்க அழைப்புவிடுத்துள்ளார். 

டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத்தலைவர் மாளிகையில் ராமநாத் கோவிந்தை சந்தித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவுக்குத் தலைமைதாங்கிட, குடியரசுத் தலைவருக்கு அழைப்புவிடுத்ததாகவும், அவரும் கோரிக்கையை ஏற்றதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளை இப்போது திறக்க முடியாத சூழ்நிலை உள்ளது என்றும், பெற்றோர்கள், அதிகாரிகளுடன் ஆலோசித்து அது பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் பதிலளித்தார்.

மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என தெரிவித்த மு.க.ஸ்டாலின், மேகதாது விவகாரத்தில் சம்மந்தப்பட்ட கேரளம், புதுச்சேரி அரசுகளுடன் கலந்தாலோசிக்க அவசியமில்லை என பதிலளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments