பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டி இங்கிலாந்து அணி வெற்றி

0 2397
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டி இங்கிலாந்து அணி வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 45ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, தொடரை சமன் செய்தது.

லீட்ஸில் நடந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, களம் கண்ட பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 45 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 1க்கு 1 என்ற கணக்கில் சமன் செய்தது.

இந்த போட்டியில், இங்கிலாந்தின் லிவிங்ஸ்டன் அடித்த சிக்சர் ஒன்று ஸ்டேடியத்தை தாண்டி சென்றது. 121 புள்ளி ஒன்பது ஆறு மீட்டர் தொலைவிற்கு பறந்து சென்ற இந்த சிக்சர், மிகப்பெரிய சிக்சராக கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments