சசிகலா தவறான தகவல்களை தெரிவிக்கிறார், அதிமுகவை வீழ்த்த யாராலும் முடியாது - எடப்பாடி பழனிசாமி

0 6593
சசிகலா தொடர்ந்து தவறான தகவல்களை தெரிவிப்பதாகவும், அதிமுகவை வீழ்த்த யாராலும் முடியாது எனவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சசிகலா தொடர்ந்து தவறான தகவல்களை தெரிவிப்பதாகவும், அதிமுகவை வீழ்த்த யாராலும் முடியாது எனவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கிய பின்னர் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அதிமுக தயாராகி வருகிறது என்றார்.

தொடர்ந்து, அதிமுக ஆட்சியில் கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, தடுப்பூசி வீணடிக்கப்படவில்லை எனவும், அப்போது பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை எனவும் தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அதிமுக தயாராகி வருகிறது எனவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments