தன்னுடன் செல்பி எடுக்க 100 ரூபாய் கட்டணம் என அறிவித்துள்ள அமைச்சர்

0 2477

மத்தியப் பிரதேசப் பெண் அமைச்சர் உஷா தாக்கூர் தன்னுடன் செல்பி எடுத்துக் கொள்வதற்கு நூறு ரூபாய் கட்டணம் என அறிவித்துள்ளார்.

இந்தப் பணத்தைக் கட்சியின் செயல்பாடுகளுக்கு வழங்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார். செல்பி எடுத்துக் கொள்ள நேரமாவதால் நிகழ்ச்சிகளுக்குக் குறித்த நேரத்தில் செல்ல முடியவில்லை என்றும், அதைத் தவிர்க்கவே கட்டணம் என அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பிஎம் கேர்ஸ் நிதிக்கு 500 ரூபாய் நன்கொடை வழங்க வேண்டும் என உஷா தாக்கூர் அண்மையில் கூறி இருந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments