சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் - கமல்

0 4722

சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய அரசு ஆவன செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்த அறிக்கையில், சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது தங்களைப் பாதிக்கும் பிரச்னைகளில் எம்எல்ஏக்களின் கருத்து என்னவாக இருக்கிறதென்பதைப் பொதுமக்கள் அறிந்து கொள்ள உதவியாக இருப்பதுடன், பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கும் பயனுள்ளதாக இருக்ககும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பட்ஜெட் தொடரிலேயே நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments